குறைகிறது வங்கி டிபாசிட் வட்டி வேறு எதில் முதலீடு செய்யலாம்?
குறைகிறது வங்கி டிபாசிட் வட்டி வேறு எதில் முதலீடு செய்யலாம்?
ADDED : டிச 07, 2025 02:01 AM

ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்த நிலையில், வங்கிகளில் பிக்சட் டிபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால், பிக்சட் டிபாசிட்டுகளை நம்பியிருக்கும் முதலீட்டாளர்கள், குறைந்த வருமானத்தை ஈட்டும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், புதிய வட்டி விகிதங்கள் அமலாகுவதற்கு முன், தற்போது அதிக வட்டி வழங்கும் பிக்சட் டிபாசிட்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம் என துறை சார்ந்த நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய உத்திகள்:
* முதலீடு செய்ய நினைக்கும் தொகையை 1, 2, 5 ஆண்டுகள் என பிரித்து முதலீடு செய்யலாம். இது, தேவைப்படும்போது பணத்தை எடுத்துக்கொள்ள உதவும். வட்டி விகிதங்கள் மாறும்போது, குறைந்த விகிதங்களில் மீண்டும் முதலீடு செய்யும் அபாயத்தை குறைக்கும்.
* அதிக வட்டி விகிதங்கள் கிடைக்கும்போதே, ஓய்வூதியதாரர்கள் நீண்டகால பிக்சட் டிபாசிட்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இதனால், நிலையான வருமானம் குறையாது
* அதிக வருமானம் தேவைப்படுவோர், ரிஸ்க் அதிகமுள்ள கார்ப்பரேட் பிக்சட் டிபாசிட்கள், கடன் பத்திரங்களை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம்
*சிறு சேமிப்பு திட்டங்கள் அல்லது அரசாங்க பத்திரங்கள் போன்றவற்றின் ரிஸ்க்கை அறிந்து பரிசீலிக்கலாம்
*அதிக வட்டி வழங்கும் சிறு சேமிப்பு திட்டங்களையும் மூத்த குடிமக்கள் தேர்வு செய்யலாம்
*பெரும் முதலீட்டாளர்கள், தங்களின் உண்மையான வருமானத்தை பாதுகாக்க, ரியல் எஸ்டேட் நிதிகள் போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

