sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 25,095க்கு கீழே இறங்காவிட்டால் ஏற்றத்துக்கு வாய்ப்பு

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 25,095க்கு கீழே இறங்காவிட்டால் ஏற்றத்துக்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 25,095க்கு கீழே இறங்காவிட்டால் ஏற்றத்துக்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 25,095க்கு கீழே இறங்காவிட்டால் ஏற்றத்துக்கு வாய்ப்பு


UPDATED : செப் 13, 2025 12:16 AM

ADDED : செப் 13, 2025 12:11 AM

Google News

UPDATED : செப் 13, 2025 12:16 AM ADDED : செப் 13, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டி


நா ளின் ஆரம்பத்தில் சிறியதொரு ஏற்றத்துடன் 25,074- புள்ளிகளில் துவங்கிய நிப்டி, 11.30 மணி அளவில் 25,139 என்ற உச்சத்தை அடைந்து, அதன் பின் பெரிய மாற்றம் ஏதும் நிகழாமல், நாளின் இறுதியில் 108 புள்ளிகள் ஏற்றத்துடன் 25,114 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):50.17 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):1.63 என இருப்பது ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஆனால், 25,095 என்ற நிலைக்கு கீழே போகாமல் தொடர்ந்து வர்த்தகமாக வேண்டியது அவசியம். இது நடந்தால் மட்டுமே ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Image 1468467


தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி நிப்டி 25,055, 24,995 மற்றும் 24,955 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,150, 25,200 மற்றும் 25,235 என்ற எல்லைகளை, தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.

நிப்டி பேங்க்


வ ர்த்தக ஆரம்பத்தில் சிறியதொரு ஏற்றத்துடன் 58,781- புள்ளிகளில் ஆரம்பித்த நிப்டி பேங்க், 9.30 மணி அளவில் இறக்கத்தை சந்தித்து, 54,580 என்ற குறைந்தபட்ச அளவை சந்தித்து, அதன் பின் ஏற ஆரம்பித்து, 54,852 புள்ளிகள் எனும் உச்சத்தை தொட்டுவிட்டு, நாளின் இறுதியில் 139 புள்ளிகள் ஏற்றத்துடன், 54,809- புள்ளிகளில் நிறைவடைந்தது.

Image 1468468
எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 105.54, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,): 49.68 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 0.66 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏற்றம் உருவாக 54,745 என்ற அளவுக்கு கீழே போகாமல் தொடர்ந்து இருந்து வந்தால் மட்டுமே, நிப்டி பேங்க் ஏற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. 54,640, 54,470, மற்றும் 54,370 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும் 54,915, 55,020 மற்றும் 55,120 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us