ADDED : நவ 26, 2025 01:07 AM

'தேசிய பேமன்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' அதன் 'பீம்' செயலியில், 'யு.பி.ஐ., சர்க்கிள்' என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, குடும்பச் செலவுகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் சுலபமாகும்.
முக்கிய அம்சங்கள்
* ஒரு குடும்பத் தலைவர் அல்லது தலைவி, தன் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு, தன் சொந்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலவழிக்க அனுமதி வழங்கலாம்
*மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கலாம்
* இந்த அனுமதியை, அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை கொடுக்க முடியும்
*இந்த வசதியைப் பயன்படுத்தும் மற்றவர்கள், ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும், தலைமைப் பயனரின் அனுமதியை கேட்கத் தேவையில்லை
*டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பழக்கமில்லாத மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும்
*இதன் வாயிலாக, குடும்ப பணப் பொறுப்புகளை சுலபமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
சுருக்கமாகச் சொன்னால், உங்கள் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் செலவு செய்துகொள்ள நிரந்தரமாக அனுமதி கொடுக்கும் வசதி தான், இந்த யு.பி.ஐ., சர்க்கிள்.

