UPDATED : செப் 22, 2026 06:42 AM
ADDED : செப் 22, 2026 06:41 AM

பார்மா துறை பங்குகள் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக நேற்றும் ஏற்றம் கண்ட நிலையில் 'பி.எஸ்.இ., ஹெல்த்கேர்' குறியீடு புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த மூன்று வர்த்தக நாட்களாக 'நிப்டி பார்மா' குறியீடு தொடர்ந்து உயர்ந்து வருவது மட்டுமல்லாமல், அதன் பழைய உச்சத்துக்கு அருகே நெருங்கி வந்துள்ளது.
மேலும், நேற்றைய வர்த்தகத்தில் 'மேன்கைண்டு பார்மா, வொக்ஹார்ட்' ஆகிய பங்குகள் சிறப்பாக உயர்ந்தன. இதுதவிர, 'சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேப், லாரஸ் லேப்ஸ், பிரமல் பார்மா, பையோகான், டாரன்ட் பார்மா, லுாபின்' ஆகிய பங்குகளும் ஏற்றம் கண்டன.
காரணங்கள்
* ஒப்பீட்டளவில் ரிஸ்க் குறைவான துறைகளில் முதலீட்டாளர்கள் வாங்குவது
* ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் மற்றும் வரிகள், இந்திய பார்மா துறைக்கு சாதகமாகியுள்ளன
* தீவிர நோய்களுக்கான மருந்து உற்பத்தியில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவது
* 'செமாகுளூடைடு' மருந்துகளுக்கு தேவை அதிகரித்து வருவது
* புதிய மருந்துகளுக்கு ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் கிடைத் திருப்பது
* பெரிய மருந்து நிறுவனங்களிடம் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் வந்திருப்பது.

