ADDED : ஆக 20, 2024 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கி்ல் தெலுங்கானா பி.ஆர்.எஸ்.கட்சியின் கவிதா ஜாமின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
டில்லி ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்தவருமான கவிதா கடந்த மார்ச் மாதம் தொடர்ந்து பணமோசடி வழக்கில் கவிதா அமலாக்கத்துறையாலும், ஏப்ரல் மாதம் சி.பி.ஐ.யாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்..
இவரது ஜாமி்ன் மனுவை டில்லி ஐகோர்ட் ஜூலை 01-ம் தேதி தள்ளுபடி செய்து ஜாமின் மறுத்தது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

