ADDED : ஜூன் 16, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
உ.பி., மாநிலம் மதுராவில் இருந்து வந்த லாரியும், பயானாவில் இருந்து பரத்பூர் வந்த பஸ்சும், சேவார் அருகே நேற்று காலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
பஸ்சில் பயணம் செய்த பிரதாப் சிங்,57, மற்றும் ஹர்பன்,35 ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பேர் பரத்பூர் ஆர்.பி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சேவார் போலீசார், பஸ் மற்றும் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.