இண்டியா கூட்டணியில் ஐந்து வருடங்களுக்கு 5 பிரதமர்கள் : மோடி
இண்டியா கூட்டணியில் ஐந்து வருடங்களுக்கு 5 பிரதமர்கள் : மோடி
UPDATED : ஏப் 27, 2024 10:12 PM
ADDED : ஏப் 27, 2024 09:25 PM

கோலாப்பூர்: இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 5 வருடங்களில் 5 பிரதமர்கள் உருவாகுவார்கள் என பிரதமர் மோடி கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடைபெற்ற பிரசார பேரணியில் பிரதமர் பேசியதாவது: இண்டி கூட்டணி வெற்றி பெற்றால் ஐந்து வருடங்களில் ஐந்து பிரதமர்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சி கூட்டணியால் ஆட்சி அமைக்க தேவையான மூன்று இலக்க எண்ணி்க்கையை நெருங்க முடியாது. கர்நாடக மாநிலத்தில் ஒ,பி.சிக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு சலுகை வழங்கப்பட்டதை போன்று நாடு முழுவதும் அதனை விரிவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது' திருப்தி மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் தாழ்ந்து வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அதன் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பையும் நிராகரித்தது.
தற்போது முடிந்துள்ள முதல் இரண்டு கட்ட வாக்கு பதிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது கட்ட வாக்கு பதிவில் இண்டியா கூட்டணி தோற்கடிக்கப்படும் வகையில் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அடுத்த கட்டங்களில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணிக்கு அமோகமான தோல்வியை கொடுக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

