ADDED : ஜூன் 01, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தட்சிண கன்னடா, : மங்களூரில் மூன்று நாட்கள், இந்திய கடல் அலை சறுக்கு விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின.
இந்திய கடல் அலை சறுக்கு விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் ஐந்தாவது இந்திய கடல் அலை சறுக்கு விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின.
சசிட்லு கடற்கரையில் நடந்த இப்போட்டியில், தேசிய அளவில் புகழ்பெற்ற ரமேஷ் புதிஹால், ஹரிஷ், ஸ்ரீகாந்த், மணிகண்டன், கமாளி மூர்த்தி, சிரிஷ்டி செல்வம், சந்தியா அருண் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள், ஆண்கள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவியர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
முதல் நாள் போட்டியில், வீரர்களின் சாகசத்தை கண்டு, பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். இப்போட்டிகள் ஜூன் 2ம் தேதி வரை நடக்கிறது.