sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோவில்களை பாதுகாத்த அஹல்யா பாய்

/

கோவில்களை பாதுகாத்த அஹல்யா பாய்

கோவில்களை பாதுகாத்த அஹல்யா பாய்

கோவில்களை பாதுகாத்த அஹல்யா பாய்


ADDED : ஜூன் 25, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகன்னடா மாவட்டத்தின் கோகர்ணாவில் கடவுளுக்கு மட்டுமின்றி ராணிக்கும் பூஜை நடக்கிறது. அந்த ராணி யார், அவரது பின்னணி என்ன, அவரை கடவுளாக நினைத்து பூஜிக்க என்ன காரணம் என்ற கேள்விகள் எழுவது சகஜம். அது சுவாரஸ்யமான விஷயம்.

உத்தரகன்னடாவின் கோகர்ணா மிக சிறந்த புண்ணிய தலமாகும். இங்கு ராஜ மாதா அஹல்யா பாய் ஹோல்கர் என்ற பெயரில் தர்ம சத்திரம் உள்ளது. இந்த சத்திரத்தில் அஹல்யா பாய் ஹோல்கருக்கு தினமும் பூஜை நடக்கிறது.

கோவில்கள் இடிப்பு


இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, பல கோவில்களை இடித்துத் தள்ளி, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தினர். இவர்களின் கோரப்பார்வையில் சிக்கி, பாழ்படுத்தப்பட்ட கோவில்களை தேடி தேடி சீரமைத்தவர் ராணி அஹல்யாபாய்.

கடந்த 1725 முதல் 1795 வரை மாளவ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த இவர், தன் வாழ்நாளில் செய்த பணிகள், மிகவும் மகத்தானது. மத்திய பிரதேசத்தின் இந்துார் ராணியாக இருந்த இவர், மத்திய பிரதேசத்தின் மஹேஸ்வரா, காசி விஸ்வநாதர், குஜராத்தின் சோமேஸ்வரா, ஸ்ரீநகர், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார் நாத், வாரணாசி, நைமிஷாரண்யபுரி, ராமேஸ்வரம், உடுப்பி, கோகர்ணா ஆகிய கோவில்களை, ஆங்கிலேயர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றி சீரமைத்தார்.

ஹிந்துக்கள் தற்போது தீர்த்த யாத்திரை சென்று, கோவில்களை தரிசிக்கின்றனர் என்றால், அதற்கு அஹல்யா பாய் முக்கிய காரணம். கடவுள்களை வழிபடும்போது, இவரையும் மறக்காமல் நினைவுகூர வேண்டும். இவர் இல்லையென்றால் இன்று நமக்கு கோவில்கள் கிடைத்திருக்காது.

கண்ணாடி பெட்டி


அஹல்யா பாய், கோகர்ணாவுக்கு வந்தபோது, இங்குள்ள பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூக்கள் தாம்பூலம், பரிசு பொருட்கள் கொடுத்தார். அப்போது அவர், சித்தேஸ்வரா குடும்பத்தின் லட்சுமிக்கு அளித்திருந்த கண்ணாடி பெட்டியை, வேதிக் வில்லேஜ் ஹோம் ஸ்டே உரிமையாளரான ராஜிவ் பேலகேரி என்பவர், சேகரித்து வைத்துள்ளார்.

கோகர்ணாவில் சுற்றுலா பயணியரின் வசதிக்காக, தர்ம சத்திரம் கட்டியதும் அஹல்யா பாய்தான். ரத வீதியில் அந்த தர்மசத்திரம் இப்போதும் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் நடந்தது.

சத்திரத்தில் ரேவளேஸ்வரர் சுவாமியுடன், அஹல்யா பாயின் விக்ரகமும் உள்ளது. கடவுளுக்கு பூஜை நடக்கும்போது, அஹல்யா பாய்க்கும் பூஜை நடக்கிறது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர், ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் உள்ள ஊர்களில், கோவில்களை காப்பாற்றி நற்பணிகள் செய்துள்ளார். இவரை நாம் எப்போதும் நினைவுகூர்வது அவசியம்.






      Dinamalar
      Follow us