ADDED : மே 05, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் பகுதி வழியாக, இந்திய விமானப் படை வீரர்கள் நேற்று இரண்டு வாகனங்களில் சென்றனர்.
விமானப் படை தளத்துக்கு சென்ற அவர்களது வாகனங்கள் மீது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் ஐந்து விமானப் படை வீரர்கள் காயமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.