ADDED : ஆக 23, 2024 08:35 PM
புதுடில்லி:டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது:
கடந்த ஓராண்டில் டில்லி ஜல் போர்டு பராமரிப்புப் பணிகள் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. அதனால்தான் சிறு மழைக்கே கூட டில்லி மாநகரம் தண்ணீரில் மிதக்கிறது. தற்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் சவுரவ் பரத்வாஜ் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இன்று டில்லி மாநகர் மிதப்பதற்கு பொறுப்பேற்று பரத்வாஜ் உடனடியாக பதவி விலக வேண்டும்.
கிராரி, சங்கம் விஹார் ஆகிய இடங்களில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரோஹினி, ராஜேந்திர நகர், படேல் நகர், கமலா நகர் போன்ற மேடான பகுதிகள் கூட பாதிக்கப்பட்டுள்ளன. பழைய டில்லி ரயில் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் இடிந்தும் கூட இன்னும் அதை சீரமைக்கவில்லை.
நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, வெள்ள பாதிப்புக்கான நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் மற்றும் அதிகாரிகளை குற்றம் சாட்டுவதில்தான் மும்முரமாக இருக்கிறார்.

