குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண இன்று போன் செய்ய அழைப்பு
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண இன்று போன் செய்ய அழைப்பு
ADDED : ஏப் 12, 2024 05:39 AM

பெங்களூரு: தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகரை, பொது மக்கள் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், கடும் வறட்சி நிலவுகிறது. பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நகரின் 7,000 போர்வெல்கள் வற்றி விட்டன. பல சுத்தமான குடிநீர் மையங்கள் மூடப்பட்டுள்ளன.
தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, அவரிடம் பொதுமக்கள் தண்ணீர் பிரச்னையை கூறி, தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இன்று காலை 9:30 மணி முதல், 10:30 மணி வரை, 080 - 2294 5119, 2222 9639 என்ற தொலைபேசியில் மக்கள் தொடர்பு கொள்ளலாம். போன் செய்தால், அவரே பேசுவார்.
இது தொடர்பாக, பெங்., குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
குடிநீர் பிரச்னை, வடிகால் பிரச்னை, பாதாள சாக்கடை பிரச்னை, குடிநீர் பில் பிரச்னை குறித்து பொது மக்கள், வாரிய தலைவருடன் பேசி தீர்வு பெறலாம். குடிநீர் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், தலைவருடன் பேசும் போது, தங்கள் மீட்டரின் ஆர்.ஆர்.எண்ணை சொல்லி பேச வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

