ADDED : ஆக 26, 2024 12:43 AM
பிஜ்னோர்: பஞ்சாப் மாநிலம் பெரேஸ்பூரில் இருந்து ஜார்க்கண்டின் தன்பாத் நகருக்கு, கங்கா சட்லெஜ் பயணியர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது.
இதில், உத்தர பிரதேசத்தில் நடக்கும் ேபாலீஸ் பணிக்கான தேர்வுக்கு செல்லும் 200 பேர் உட்பட, ஏராளமானோர் பயணம் செய்தனர்.
உ.பி.,யின் பிஜ்னோர் அருகே சக்ராஜ்மால் பகுதியில் நேற்று அதிகாலை ரயில் சென்றது.
அப்போது ரயிலின் 10 பெட்டிகள் தனியாக கழன்று சிறிது துாரம் ஓடி நின்றன. இதனால் பயணியர் பீதியடைந்தனர்.
அந்த பெட்டிகளில் இருந்த பயணியர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
இதையடுத்து விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கழன்று ஓடிய ரயில் பெட்டிகளை மீண்டும் இணைத்தனர்.
இதற்கிடையே போலீஸ் தேர்வுக்கு செல்லும் நபர்களை மூன்று பஸ்கள் ஏற்பாடு செய்து, அதில் ஏற்றி தேர்வு மையத்துக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பி வைத்தது.
இதையடுத்து, கழன்று ஓடிய பெட்டிகள் இணைக்கப்பட்டு தன்பாத் நோக்கி அந்த ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.