ADDED : ஏப் 01, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார் : தன் இரண்டு மகன்களை கொலை செய்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
கோலார், சீனிவாசபுராவின், சீகேஹள்ளி கிராமத்தில் வசித்தவர் நாராயணசாமி, 40. இவரது மனைவி லட்சுமி, 35. தம்பதிக்கு பவன், 12, நிதின், 10, ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.
சமீப நாட்களாக லட்சுமிக்கு, வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கணவர் கண்டித்தும், மனைவி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் நாராயணசாமி மனம் அழுத்தத்துக்கு ஆளானார்.
நேற்று காலை, மனைவி வீட்டில் இல்லாதபோது, இரண்டு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த நாராயணசாமி, தானும் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சீனிவாசபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.

