ADDED : ஜூலை 04, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்ரதுர்கா: குடிகாரனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவருடன் செல்பி எடுத்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, குடியை விட்டுவிடும்படி அறிவுரை கூறினார்.
ஈஸ்வரப்பா நேற்று சித்ரதுர்காவுக்கு வந்திருந்தார். விருந்தினர் இல்லத்தில் ஓய்வில் இருந்தார். ஆதரவாளர்கள் பலரும் அவரை சந்திக்க வந்தனர். அவர் ஓய்வு எடுத்துவிட்டு, புறப்படும் போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வந்தார். அவர் குடிபோதையில் இருந்தார்.
ஈஸ்வரப்பாவுடன், செல்பி எடுக்க வேண்டும் என, விரும்பினார். ஆட்டோ ஓட்டுனருடன் செல்பி எடுத்து கொண்டு, அவருக்கு புத்திமதி கூறினார்.
'உன்னை பார்க்கும் போதே, ஆட்டோ ஓட்டுனர் என, தெரிகிறது. நீ இப்படி குடித்தால், உன் மனைவி எவ்வளவு மன வேதனைக்கு ஆளாவார். குடிப்பழக்கத்தை விட்டு விடு' என, அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.