ADDED : ஜூலை 11, 2026 10:53 PM
பொதுவான வழிகாட்டி! கட்சி அடிப்படையிலேயே தேர்தல்களில் நாம் போட்டியிடுகிறோம். ஆனால் தேர்தல் முடிந்த பின், மக்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவது நம் பொறுப்பு. சபையில் கருத்துகள் மாறுபடலாம். ஆனால், அரசியலமைப்பு சட்டமே நம் பொதுவான வழிகாட்டியாக திகழ வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி
வாய்ப்பை பயன்படுத்துக! உலகளவில் செமி கண்டக்டர் துறையில், 10 லட்சம் நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி நம் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேற வேண்டும். பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால் நாட்டில் தற்போது, 12 செமிகண்டக்டர் ஆலைகள் பல்வேறு கட்ட மேம்பாடுகளில் உள்ளன. அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சர், பா.ஜ.,
அரசை கவிழ்க்க சதி! ஜம்மு – காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியை பிளவுபடுத்தி, அரசை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இதற்காக எங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், 30 கோடி ரூபாய் வரை அக்கட்சியினர் பேரம் பேசி வருகின்றனர். மேலும், மாநில அந்தஸ்தை காட்டியும் பா.ஜ.,வினர் பேரம் பேசுவது வெட்கக்கேடானது. ஒமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
