ADDED : ஜூலை 09, 2024 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜாலஹள்ளி : பெங்களூரில் நர்சிங் படித்து வந்த, மேற்கு வங்க மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தியா மண்டல், 22. பெங்களூரு, ஜாலஹள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில் நர்சிங் படித்து வந்தார். கல்லுாரி அருகே தங்கும் விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றுவிட்டு, அறைக்கு வந்தார். இரவில் உணவு சாப்பிட வரவில்லை.
இதனால் விடுதி ஊழியர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். அவர் துாக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஜாலஹள்ளி போலீசார், விடுதிக்குச் சென்று, தியா மண்டல் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.