sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இருவரை கொன்ற 'சைக்கோ' கைது

/

இருவரை கொன்ற 'சைக்கோ' கைது

இருவரை கொன்ற 'சைக்கோ' கைது

இருவரை கொன்ற 'சைக்கோ' கைது


ADDED : மே 26, 2024 09:15 PM

Google News

ADDED : மே 26, 2024 09:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்டி மார்க்கெட்: துாங்கி கொண்டு இருந்த இருவரின் தலையில், கல்லை போட்டு கொலை செய்த, 'சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு ஜெயநகர் 7வது கிராசில் கடந்த 12ம் தேதி இரவு, சாலையோரம் துாங்கி கொண்டு இருந்தவர் தலையில் கல்லை போட்டு, மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதே பாணியில் கடந்த 18ம் தேதி, சிட்டி மார்க்கெட் வணிக வளாகத்திலும், ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த இரு கொலையிலும், ஒரே கும்பல் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

கொலை நடந்த இரு இடங்களிலும் உள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில், ஒரு வாலிபர் புகைப்படம் சிக்கியது. அந்த வாலிபர் தான், கொலைகளை செய்தது உறுதியானது. நேற்று முன்தினம் சிட்டி மார்க்கெட் போலீசார், அந்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில் பனசங்கரியின் கிரிஷ், 35 என்று தெரிந்தது. இரவில் சாலையோரம் துாங்குபவர்களை பார்த்தால், அவர்கள் தலையில் கல்லை போட்டு கொல்ல வேண்டும் என்ற, சைக்கோ மனநிலை கிரிஷுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us