ADDED : ஜூன் 03, 2024 04:52 AM

தங்கவயல்: தங்கச்சுரங்க தொழிற்சங்க வரலாற்று நுாலாசிரியர் எஸ்.ராமசாமி மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று மரக்கன்று நடப்பட்டது.
மாரிகுப்பம் ஸ்மித் சாலையில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கவுன்சிலர் ஜெயபால் தலைமையில், வக்கீல் ஜோதிபாசு குத்துவிளக்கு ஏற்றினார். படத்தை, முதல் நிலைக்கல்லுாரி செயலர் கிருஷ்ண குமார் திறந்து வைத்தார்.
மாநில தி.மு.க., முன்னாள் அமைப்பாளர் கிள்ளிவளவன், மார்க்., கம்யூனிஸ்ட் முன்னாள் கவுன்சிலர் குமரேசன், தொழிற்சங்கத் தலைவர் கருணாகரன் ஆகியோர் நினைவுரை வழங்கினர்.
பெங்களூரு டெக்கான் பள்ளி நிர்வாகி ஆண்டாள் கிள்ளிவளவன், தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
கவுன்சிலர் டேவிட், முன்னாள் கவுன்சிலர்கள் ஸ்டேன்லி, அமல்தாஸ், சண்முகம், தொழிற் சங்கத் தலைவர்கள் விஜயராகவன், பன்னீர் செல்வம், தாடி அன்பழகன், ஸ்ரீ குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தங்கச் சுரங்க தொழிற்சங்க வரலாற்று நூலாசிரியர் ராமசாமி நினைவு நாளையொட்டி மரக் கன்றுகள், நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆண்டாள் கிள்ளிவளவன் மரக்கட்டைகளை நட்டார். இடம்: மாரிகுப்பம், தங்கவயல்.