பறிமுதல் செய்த இ-ரிக்ஷாக்கள் விரைவில் அழிப்பு: டில்லி அரசு
பறிமுதல் செய்த இ-ரிக்ஷாக்கள் விரைவில் அழிப்பு: டில்லி அரசு
ADDED : ஆக 24, 2024 09:44 PM
புதுடில்லி,:போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்த, பதிவு செய்யப்படாத மின்சார ரிக்ஷாக்களை அழிக்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி கூறியதாவது:
டில்லியில், பதிவு செய்யாத போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மின்சார ரிக்ஷாக்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ரிக்ஷாக்கள் ரோலரில் நசுக்கப்படும். அதன்பின், அது டெண்டர் விடப்பட்டு விற்பனை செய்யப்படும். மாநகர் முழுதும் மின்சார ரிக்ஷாக்களை பதிவு செய்ய ஒரு வார அவகாசம் வழங்கப்படும். பதிவு செய்யாத ரிக்ஷாக்கள் பறிமுதல் செய்யப்படும்.
மாநகரில் நகரத்தின் நெரிசலைக் குறைக்க துணைநிலை கவர்னர் நடத்திய உயர்நிலைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அப்போது, மின்சார -ரிக்ஷாக்களின் சட்டவிரோதமாக அதிகரிப்பதை தடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 1.2 லட்சம் பதிவு செய்யப்பட்ட மின்சார ரிக்ஷாக்கள் உள்ளன. ஆகஸ்ட் 1 முதல் 21 வரை 1,077 ரிக்ஷாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.