ADDED : ஜூலை 25, 2024 10:52 PM

பாலக்காடு : கேரள மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி பாலக்காட்டில் நேற்று துவங்கியது.
கேரள மாநிலம், பாலக்காடு சந்திரநகர் அருகே உள்ள மையத்தில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று துவங்கியது.
மாவட்ட எஸ்.பி., ஆனந்த் துவக்கி வைத்தார். துப்பாக்கி சுடும் சங்க மாநிலத் தலைவர் ஜேம்ஸ், மாவட்ட செயலாளர் நவீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சப்-ஜூனியர் (16 வயதுக்குள்), யூத் (18 வயதுக்குள்), சப்-யூத் (21 வயதுக்குள்), சீனியர் (21-- 45 வயது), மாஸ்டர் (45- - 60), சீனியர் மாஸ்டர் (60 - -70), சூப்பர் மாஸ்டர் (70 வயதுக்கு மேல்) ஆகிய பிரிவுகளில், 50 மீட்டர், 25 மீட்டர், 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடக்கிறது.
போட்டியில், அலன் சுனீஷ், ஆபேல் சுனீஷ், அபிராமி, பிரசோப், அமீர் அலி, நாசர் என, 20க்கும் மேற்பட்ட தேசிய வீரர்கள் உட்பட, 650 பேர் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாவட்டம் பாலக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியானது, நாளை, 28ம் தேதி நிறைவு பெறுகிறது.

