ADDED : ஆக 05, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விசாகப்பட்டினம்,: ஆந்திராவின் விசாகப்பட்டினம் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த காலியான ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பயணியர் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா நகரில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை திருமலா விரைவு ரயில் வந்தது.
இதில் வந்த பயணியர் அனைவரையும் ரயில் நிலையத்தில் இறக்கி விட்ட நிலையில், அந்த ரயில் பணிமனைக்கு சென்றது.
அப்போது, 'பி7' என்ற பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்தது.
இதைப்பார்த்த பணிமனை ஊழியர்கள் உடனே தீயை அணைத்தனர்.
பயணியர் யாரும் இல்லாததால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் பற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.