ADDED : மார் 25, 2024 06:47 AM
கோலார்: ''கட்சி மேலிடம் யாருக்கு சீட் கொடுத்தாலும், அவர்களின் வெற்றிக்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும்,'' என பங்கார்பேட் காங்., - எம்.எல்.ஏ., நாராயணசாமி அழைப்பு விடுத்தார்.
லோக்சபா தேர்தல் என்பதால், கோலாரின், பங்கார்பேட்டில் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., நாராயணசாமி, நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் தொண்டர்கள் முன்னிலையில், கண்ணீர் சிந்தினார்.
பின் அவர் பேசியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில், பா.ஜ., - எம்.பி.,யால் பெரும் வலியை அனுபவித்துள்ளேன். வர்த்தகம், வியாபாரத்தில் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் என்பதால், என் மகளின் திருமணத்தையே தள்ளி வைத்துள்ளேன்.
காங்கிரசின் வெற்றியே என் குறிக்கோள். யாரும் சோம்பலாக இருக்காதீர்கள். கோலாரில் காங்கிரசை ஆதரியுங்கள். அமைச்சர் முனியப்பாவுக்கு சீட் கொடுக்கும்படி, கட்சி மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். யாருக்கு சீட் கொடுத்தாலும், கட்சிக்கு ஆதரவாக நாம் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

