'தீம் பார்க்' முறைகேடு வழக்கு திட்ட இயக்குனர் 'சஸ்பெண்ட்'
'தீம் பார்க்' முறைகேடு வழக்கு திட்ட இயக்குனர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 25, 2024 11:02 PM
உடுப்பி: பரசுராம் தீம் பார்க் அமைத்ததில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி., விசாரணை நடந்து வரும் நிலையில், நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர் அருண்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது உடுப்பி கார்கலாவில் 11 கோடி ரூபாய் செலவில், 'பரசுராம் தீம் பார்க்' அமைக்கப்பட்டது. அங்கு பரசுராமரின் சிலையும் நிறுவப்பட்டது.
பரசுராம் தீம் பார்க்கில், போலி பரசுராமரின் சிலை நிறுவப்பட்டதாக, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினர்.
விசாரணை நடத்த வேண்டும் என்று, காங்கிரஸ் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று அரசு, சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது விசாரணை நடந்து வருகிறது.
விசாரணைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், சாட்சிகளை அழிப்பதை தடுக்கும் வகையிலும், பரசுராம் தீம் பார்க் திட்டப் பணிகளை மேற்கொண்ட, நிர்மிதி திட்ட இயக்குனர் அருண்குமாரை சஸ்பெண்ட் செய்து, உடுப்பி கலெக்டர் வித்யா குமாரி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த வாரம் சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் பேசும் போது, பரசுராம் தீம் பார்க் சிலை அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

