ADDED : ஏப் 27, 2024 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷிவமொகா: ''திரைப்பட நடிகர்களை பார்க்க, மக்கள் கூட்டம் குவியும். ஆனால் இவர்கள் ஓட்டு போடமாட்டார்கள்,'' என, ஷிவமொகா சுயேச்சை வேட்பாளர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
அமைச்சர் மது பங்காரப்பா, நல்ல கண்ணாடி வாங்கிக் கொள்ளட்டும். நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது, எவ்வளவு பேர் வந்தனர் என்பது தெரியும். திரைப்பட நடிகர்களை பார்க்க மக்கள் வருவர். ஆனால் நடிகர்களை பார்த்து, மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.
நடிகர்களை பார்த்து மக்கள் ஓட்டு போடுவர் என, அமைச்சர் மது பங்காரப்பா மனபிரம்மையில் இருக்கிறார். எடியூரப்பா, தன் மகன் ராகவேந்திராவை வெற்றி பெற வைக்க, கீதா சிவராஜ்குமாரை களமிறங்கும்படி பார்த்துக் கொண்டார்.
இவ்வாறு அவர்கூறினார்.

