ADDED : ஆக 07, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துவாரகா:துவாரகா, உள்ள கோல்ப் வியூ அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முழுப் பணம் செலுத்திய ஒதுக்கீட்டாளர்களுக்கு உரிமைக் கடிதங்களை டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையம் வழங்கத் துவங்கியுள்ளது.
ஒதுக்கீட்டாளர்களுக்கு உரிய நேரத்தில் குடியிருப்புகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக அனைத்துப் பணிகளையும் டி.டி.ஏ., துணைத் தலைவர் கண்காணித்து வருகிறார்.
இந்த திட்டத்திற்காக கூடுதல் பொறியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்களை டி.டி.ஏ., நியமித்துள்ளது. அனைத்துப் பிரிவிலும் தரம் பராமரிக்கப்படுவதையும், பணித்திறன் சிறப்பாக இருப்பதையும் உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உரிமைக் கடிதம் கிடைத்தவுடன் தங்கள் குடியிருப்புகளுக்குச் செல்லும்படி ஒதுக்கீட்டாளர்களை டி.டி.ஏ., கேட்டுக் கொண்டுள்ளது.