ADDED : பிப் 22, 2025 11:33 PM

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓட்டுச்சீட்டு முறையை வரவேற்றுள்ளார். பிரதமர் மோடிக்கு இந்த விஷயம் தெரியுமா? மஹாராஷ்டிராவில் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன், லட்சக்கணக்கான வாக்காளர்கள் அதிகரித்தது குறித்து அறிந்தால் டிரம்பே திகைப்பார்.
வேணுகோபால், பொதுச்செயலர், காங்கிரஸ்
சமோசாவுக்கா அக்கப்போர்?
ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு சி.ஐ.டி., அலுவலகம் சென்றபோது, அவருக்கு வழங்க வேண்டிய சமோசா, அவரின் பாதுகாவலருக்கு வழங்கப்பட்டது. இதற்கு விசாரணை குழு அமைத்து உள்ளனர். அந்த விபரங்களை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து உள்ளனர்.
ஜெய்ராம் தாக்குர், ஹிமாச்சல் முன்னாள் முதல்வர்,பா.ஜ.,
மக்களை தேடி செல்லுங்கள்!
காங்கிரஸ், கடந்த 11 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளது. ஆளுங்கட்சியாவதற்கு அந்த கட்சி தலைவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு அந்த கட்சி தலைவர்களும், கட்சித் தொண்டர்களும் மக்களை தேடிச் செல்ல வேண்டும். அறைகளுக்குள் முடங்கி கிடக்கக் கூடாது.
சச்சின் பைலட், மூத்த தலைவர், காங்கிரஸ்

