ADDED : பிப் 28, 2025 11:16 PM

தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தில், முக்கிய பதவிகள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், தலித்துகள் பாதிக்கப்படுகின்றனர். இது, அவர்களுக்கு எதிரான பா.ஜ.,வின் மனநிலையை காட்டுகிறது. இந்த ஆணையத்தை பா.ஜ., அரசு பலவீனப்படுத்துகிறது.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,
மொழிகளை மதிக்க வேண்டும்!
பன்முகத்தன்மையே நம் நாட்டின் அழகு. பீஹார் மாநிலத்தில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அனைத்து மொழிகளும் மதிக்கப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில், ஒருவர் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; பேசலாம். அதற்கு உரிமை உண்டு.
தேஜஸ்வி யாதவ்,தலைவர்,ராஷ்ட்ரீய ஜனதா தளம்
மம்தா பயப்படுகிறார்!
மேற்கு வங்கத்தில், 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை பார்த்து, முதல்வர் மம்தா பானர்ஜி பயப்படுகிறார். அதனால், வாய்க்கு வந்தபடி அவர் பேசுகிறார். தேர்தலில் வெற்றி பெற, வங்கதேசத்தில் இருந்து வாக்காளர்களை திரிணமுல் காங்., அழைத்து வருகிறது.
லாக்கெட் சாட்டர்ஜி, மூத்த தலைவர்,பா.ஜ.,