ADDED : ஜூன் 03, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலக்ட்ரானிக்சிட்டி,
பல்லக்கு சுமந்து சென்ற வாகனத்தில், மின்சாரம் பாய்ந்தது. இதை தொட்ட இருவர் உயிரிழந்தனர்.
பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டி அருகில் கொல்லஹள்ளியில், நேற்று காலை அப்பகுதி கோவில் திருவிழாவை முன்னிட்டு, பல்லக்கு உற்சவம்நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி ஊர்வலத்துடன் சென்றனர்.
வீரசந்திராவை சேர்ந்த ரங்கநாத், 33, பல்லக்கு இருந்த டிராக்டரை ஓட்டினார். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது, டிராக்டரில் மின்கம்பி உராய்ந்தது. இதனால் ஓட்டுனர் ரங்கநாத்துக்கு மின்சாரம் பாய்ந்தது. இவரை காப்பாற்ற முற்பட்ட ஹரிபாபு, 25, மீதும் மின்சாரம்பாய்ந்தது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தனர். எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.