ADDED : மார் 29, 2024 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில், டிராக்டர் -மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் இருவர் உயிரிழந்தனர்.
உ.பி., மாநிலம் முசாபர் நகர் அருகே ஹரிநகரைச் சேர்ந்த அங்குல், 22, சேகர், 20 ஆகிய இருவரும் நேற்று காலை, டிராக்டரில் கரும்புச் சக்கை ஏற்றிக் கொண்டு சென்றனர்.
செல்லும் வழியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி, டிராக்டரில் ஏற்றப்பட்டு இருந்த கரும்புச் சக்கையில் உரசியது.
உடனடியாக டிராக்டர் முழுதும் மின்சாரம் பாய்ந்தது. அதில் இருந்த இருவரும் உடல் கருகி அதே இடத்தில் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து திரண்ட கிராம மக்கள் சாலை மறியல் நடத்தினர். போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து, கிராம மக்களை சமரசம் செய்தனர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

