ADDED : மார் 29, 2024 11:50 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான பின், இதுவரை 20.85 கோடி ரூபாய் ரொக்கம், 27 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, கர்நாடக தேர்தல் ஆணையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் இதுவரை 62.42 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ., 20.85 கோடி ரொக்கம், 70.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இலவச பரிசு பொருட்கள், 27 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 8.63 லட்சம் லிட்டர் மதுபானம், 1.47 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 211.23 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ஒன்பது கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள, 15 கிலோ தங்க நகைகள், 27 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள 59.04 வெள்ளி பொருட்கள், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21.17 கேரட் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் 969 எப்.ஐ.ஆர்.,கள் பதிவாகியுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 7,899 பேர் தொலைபேசியிலும், 8,703 பேர் மொபைல் ஆப் வழியாகவும் புகார்கள் பெறப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

