தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ உ.பி., பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 11 பேர் பலி

உ.பி., பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 11 பேர் பலி

உ.பி., பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 11 பேர் பலி


ADDED : ஆக 31, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உ.பி.,யின் கவுசாம்பி மாவட்டம், மனோரி பகுதியில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று மதியம், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த அதிர்வில், தொழிற்சாலை அருகில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. தீயணைப்புப் படையினர் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 16 பேரை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி, 11 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us