பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிய 12 வாகனங்கள்
பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிய 12 வாகனங்கள்
ADDED : டிச 14, 2025 02:07 AM
புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா அருகே தாத்ரி பகுதியில் உள்ள கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில், நேற்று காலை வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
அப்போது கடும் பனிமூட்டம் நிலவியதால் போதுமான வெளிச்சம் இல்லை.
இதனால், முன்னால் சென்ற வாகனங்கள் மீது பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில், 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேதமடைந்த வாகனங்களை, கிரேன் மூலம் போலீசார் அப்புறப் படுத்தினர்.
இதற்கிடையே விபத்தை தடுக்கும் விதமாக, நாளை முதல் வரும் பிப்., 15 வரை இந்த சாலையில், குறைவான வேகத்தில் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

