ADDED : அக் 04, 2025 08:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வடமேற்கு டில்லியில், 150 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அதைப் பதுக்கி வைத்திருந்த பெண்ணை கைது செய்தனர்.
தலைநகர் டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், அண்டை மாநிலங்களில் இருந்து பலர் பட்டாசுகளை வாங்கி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் இருந்தே தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வடமேற்கு டில்லி சகுர்பூரில் நேற்று நடத்திய சோதனையில் வினி சோப்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டு, 150 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடக்கிறது .