ADDED : நவ 09, 2025 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: வீட்டின் ஜன்னல் 'சிலாப்' இடிந்து விழுந்து, சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கருவாரவை சேர்ந்த அஜய்- - தேவி தம்பதியரின் மகன்கள் ஆதி, 7, அஜ்னேஷ், 4. ஆதி, அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், ஆதி, அஜ்னேஷ், தோழி அபிநயா, 6, ஆகியோர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள பழுதடைந்த வீட்டின் ஜன்னல் சிலாப் மீது ஏறி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஜன்னல் சிலாப் இடிந்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த மூவரையும், கோட்டத்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆதியும், அஜ்னேஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

