தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/24 கிலோ கஞ்சா பறிமுதல் தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது

24 கிலோ கஞ்சா பறிமுதல் தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது

24 கிலோ கஞ்சா பறிமுதல் தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது


UPDATED : நவ 04, 2026 12:02 PM

ADDED : நவ 04, 2026 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:02 PM ADDED : நவ 04, 2026 11:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: மண்ணார்க்காடு அருகே, 24 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், மண்ணார்க்காடு அருகே சிறக்கல்படி பகுதியில், இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையிலான போலீசாரும், போதை தடுப்பு பிரிவினரும் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோழிக்கோட்டில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தி பயணிகளிடம் நடத்திய சோதனையில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்த கதிர்வேல், 37, மற்றும் அரூர் தாலுகா கோட்டப்பட்டியை சேர்ந்த பரத், 50, ஆகியோரின், 4 பைகளில், 2.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 24 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர்.இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தனர், யாருக்கு வினியோகிக்க திட்டமிட்டிருந்தனர், இதற்கு முன் இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us