ADDED : ஜன 08, 2026 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் ஏழு பெண்கள் உட்பட 26 நக்சல்கள் நேற்று சரணடைந்தனர்.
இதுகுறித்து சுக்மா போலீஸ் எஸ்.பி., கிரண் சவான் கூறியதாவது:
நக்சல் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சரணடைந்து உள்ளனர்.
சத்தீஸ்கரின் அபுஜ்மாத், சுக்மா மற்றும் ஒடிசா எல்லையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால், இவர்களில் 13 பேர் தலைக்கு அரசு மொத்தம் 65 லட்சம் ரூபாயை பரிசாக அறிவித்திருந்தது.
சரண் அடைந்த நக்சல்களில் முக்கியமானவர் லக்மு. இந்த பெண் நக்சல் 2007ம் ஆண்டில் ஒடிஷாவில் 14 பாதுகாப்பு படையினரை வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கு உட்பட, பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால், அவரது தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

