மீண்டும் தூசி தட்டப்படும் 2ஜி வழக்கு: மேல்முறையீட்டை விசாரணைக்கு ஏற்றது டில்லி ஐகோர்ட்
மீண்டும் தூசி தட்டப்படும் 2ஜி வழக்கு: மேல்முறையீட்டை விசாரணைக்கு ஏற்றது டில்லி ஐகோர்ட்
UPDATED : மார் 22, 2024 04:17 PM
ADDED : மார் 22, 2024 11:06 AM

புதுடில்லி: 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கு பதிலாக முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்ததாகவும் இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.
அவர்கள் விடுதலையை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து இருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து விசாரணை டில்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. அப்போது 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

