தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி 20: இந்தியா பவுலிங்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி 20: இந்தியா பவுலிங்
ADDED : டிச 11, 2025 06:44 PM

முல்லன்புர்: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி இன்று பஞ்சாப்பின் முல்லன்புரில் (புதிய சண்டிகர்) நடக்கிறது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய சுப்மன் கில், அபிஷேக் சர்மா, கேப்டன் சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் ,வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் பும்ரா ஆகியோர் மீண்டும் களமிறங்குகின்றனர்.
தென் ஆப்ரிக்க அணியில் ஸ்டப்ஸ், மஹாராஜ், நோர்ட்ஜே ஆகியோர் நீக்கப்பட்டு ரீசா, பார்ட்மன் மற்றும் லிண்டா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

