UPDATED : நவ 20, 2025 10:02 PM
ADDED : நவ 20, 2025 06:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகர்தலா: திரிபுராவில் பிக் அப் வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
திரிபுராவின் தலாய் மாவட்டத்தின் எஸ்கே பாரா ரயில் நிலையம் அருகே இச்சம்பவம் நடந்தது. ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இந்த வேன் மீது, அகர்தலா நோக்கி சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், வேன் டிரைவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனால், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை.
தகவலறிந்த மீட்புப்படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்ததும், அதற்கு முன்னர் உ.பி.,யின் மிர்சாப்பூரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

