ADDED : நவ 25, 2025 01:14 AM
முசாபர்நகர்: கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டிய மூன்று போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் ஹசன்பூர் காலா கிராமத்தில் மொபைல் போன் கடை நடத்துபவர் அனஸ்,22. கடந்த 19ம் தேதி, போலீசார் தன்னை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி தீக்குளித்தார்.
இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது, வேகமாக பரவியது. இதற்கிடையில், அக்கம் பக்கத்தினர் அனஸை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி செய்து, டில்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய முசாபர் நகர் மாவட்ட சீனியர் எஸ்.பி., சஞ்சய் குமார், இதற்கு காரணமான மூன்று போலீசாரை சஸ்பெண்ட் செய்தார். மூவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

