குஜராத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் சிக்கினர்: சதிச்செயல் முறியடிப்பு
குஜராத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் சிக்கினர்: சதிச்செயல் முறியடிப்பு
ADDED : நவ 09, 2025 12:08 PM

ஆமதாபாத்: குஜராத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சதிச்செயல் முறியடிக்கப்பட்டு உள்ளது என பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலத்திற்குள் சதி செயலில் ஈடுபட, பயங்கரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கினர். தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 3 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து எந்த விபரங்களையும் வெளியிடவில்லை. இது குறித்து, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குஜராத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடக்கிறது.
இவர்களை கடந்த ஒரு வருடமாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
தற்போது சதி செயல் அரங்கேற்ற ஆயுதங்களை வழங்கும் போது மூவரும் கைது செய்யப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

