ADDED : ஜன 01, 2025 12:25 PM

புதுடில்லி: பா.ஜ., செய்வதை எல்லாம் ஆதரிக்கிறீர்களா என கேட்டு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துக்கு, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
டில்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. வாக்காளர்கள் பட்டியலில் பா.ஜ., முறைகேடு செய்துள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துக்கு, கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த காலங்களில் பா.ஜ.க., செய்த தவறுகளை ஆர்.எஸ்.எஸ்., ஆதரிக்கிறதா? மக்களுக்கு ஓட்டுக்காக வெளிப்படையாக பா.ஜ., தலைவர்கள் பணப் பட்டுவாடா செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அளிக்கிறதா?
தலித் சமூகத்தின் ஓட்டுக்கள் குறைந்துள்ளது. ஜனநாயகத்துக்கு சரியானது என்று ஆர்.எஸ்.எஸ்., நம்புகிறதா? பா.ஜ., ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று ஆர்.எஸ்.எஸ்., நினைக்கவில்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.