ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
ADDED : நவ 15, 2025 10:46 PM
புதுடில்லி: ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியைச் சேர்ந்த யோகேஷ் சர்மா என்ற யோகி என்ற ரவுடி சமூக ஊடகத்தில், 'ஷாதாரா சூட்டர்ஸ்' என்ற குழுவை ஒரு சிறுவன் உருவாக்கினார். அந்தக் குழுவில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் இணைந்தனர். அந்தக் குழுவில் குற்றச்செயல்கள் வீடியோக்களை பலர் பதிவிட்டனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்து, அதன் வீடியோவையும் இந்தக் குழுவில் பதிவேற்றி வந்தனர்.
அதைப்பார்த்து மேலும் சிலரும் இதுபோன்ற செயல்களில் இறங்கினர். கடந்த, 9ம் தேதி இரவு 10:40 மணிக்கு மானவ்,19, மற்றும் மூன்று சிறுவர்கள் ஒரு ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு மிரட்டினர். அப்போது, ஹோட்டலில் காவலாளி பதிலடி கொடுத்தார். இதில், மானவ் காலில் குண்டு பாய்ந்து சரிந்தார்.
ஆனால், நான்கு பேரும் ஒரு ஸ்கூட்டரில் ஏறி தப்பினர். இதுகுறித்து, ஹோட்டல் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மானவ் மற்றும் மூன்று சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு கார்கள்,- ஒரு ஸ்கூட்டர், ஒரு பைக், ஒரு மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.

