sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கத்ரா மார்வாடி தீ விபத்தில் 50 கடைகள் நாசம்

/

கத்ரா மார்வாடி தீ விபத்தில் 50 கடைகள் நாசம்

கத்ரா மார்வாடி தீ விபத்தில் 50 கடைகள் நாசம்

கத்ரா மார்வாடி தீ விபத்தில் 50 கடைகள் நாசம்


UPDATED : ஜூன் 15, 2024 02:40 PM

ADDED : ஜூன் 15, 2024 01:36 AM

Google News

UPDATED : ஜூன் 15, 2024 02:40 PM ADDED : ஜூன் 15, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாந்தினி சவுக்: பழைய கத்ரா மார்வாடி சந்தையில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. இரண்டு கட்டங்கள் இடிந்து விழுந்தன. 80 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

டில்லியில் சாந்தினி சவுக்கின் பழைய கத்ரா மார்வாடி சந்தையில் வியாழக்கிழமை மாலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. மாலை 4:15 மணியளவில் ஒரு கடையின் உரிமையாளர் முதலில் தீயை பார்த்தார். ஒவ்வொருவரும் மற்றவர்களை எச்சரித்து, தீ விபத்து பகுதியில் இருந்து வெளியேறினர். மற்றவர்களையும் வெளியேற்றினர். இதனால் யாருக்கும் தீக்காயம் கூட ஏற்படவில்லை. ஒரு கடையில் இருந்து தீ, அடுத்தடுத்து பரவியது. 50க்கும் மேற்பட்ட கடைகள் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகின. பெரும்பாலானவை துணிக்கடைகள். பொருட்களையோ துணியையோ பாதுகாக்க யாரும் முயற்சி செய்யாததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது.

தீ விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். தீயின் உக்கிரத்தை கட்டுப்படுத்த மொத்தம் 50 வண்டிகள் அங்கு முகாமிட வேண்டியதாயிற்று. 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 12 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.தீயை கட்டுப்படுத்த வந்த தீயணைப்புப் படையினருக்கு தண்ணீர் நிரப்புவது சவாலாக இருந்தது. அருகில் நீர் நிலையே வேறு நீராதாரமோ இல்லை. இதனால் பல கி.மீ., சென்று தண்ணீர் நிரப்பி வர வேண்டியிருந்தது. தீ தொடர்ந்து எரிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

சமீபத்திய நாட்களில் இதுபோன்ற பயங்கர தீ விபத்தை நகரம் கண்டதில்லை. ஏ.சி.,யில் இருந்து மின்கசிவு காரணமாக எழுந்த தீப்பொறியே இந்த தீ விபத்துக்குக் காரணம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீயை வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கே முழுவதுமாக கட்டுப்படுத்த முடிந்தது. அதன் பிறகு கட்டடங்களை குளிர்விக்கும் பணியில் தீயணைக்கும் படையினர் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

மேலும் சில கட்டடங்கள் இடிந்து விழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தீயணைப்பு துறையினர் எச்சரித்துள்ளனர். அதனால் வளாகத்திற்குள் நேற்று பிற்பகல் வரை கடை உரிமையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் பாதிப்பு, சேதம் விபரம் முழுமையாக தெரியவில்லை.குறைந்தபட்சம் 50 முதல் 60 கடைகள் முற்றிலும் சேதமடைந்திருக்கலாம். வியாபாரிகளுக்கு 70 முதல் 80 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்க வேண்டுமென தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இன்னும் பல கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் வணிகர்களை கடைகளுள் செல்ல அனுமதிக்கவில்லை. இதுவரை, 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்ததாக கூறுகின்றனர். 100 கடைகள் எரிந்திருக்கலாம். 70 முதல் 80 கோடி ரூபாய் வரை பொருட்கள் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடை எண் 1580 அல்லது 1581ல் இருந்து தீ பரவத் தொடங்கியது. சிறிது நேரத்தில் அது முழு பகுதியையும் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us