தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தனியார் பள்ளியில் 500 மாணவர்கள் 21 ஆசிரியர்களுக்கு உடல்நல பாதிப்பு

தனியார் பள்ளியில் 500 மாணவர்கள் 21 ஆசிரியர்களுக்கு உடல்நல பாதிப்பு

தனியார் பள்ளியில் 500 மாணவர்கள் 21 ஆசிரியர்களுக்கு உடல்நல பாதிப்பு


ADDED : ஆக 17, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில், தனியார் பள்ளியில் படிக்கும், 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதில், இரண்டு ஆசிரியர்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் பெங்களூரு ரிச்சர்ட்ஸ் டவுனில் உள்ள கிளாரன்ஸ் பள்ளியில், 500 மாணவர்கள், 21 ஆசிரியர்கள் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து, பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

பள்ளி நிர்வாகம் தரப்பில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், இரு ஆசிரியர்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இன்று வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காதர் அளித்த பேட்டி:

கிளாரன்ஸ் பள்ளியின் எந்த மாணவருக்கும், ‘எச்1 என்1’ எனும் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. இரண்டு ஆசிரியர்களுக்கு மட்டுமே பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிகிச்சை பெறுகின்றனர். பள்ளியில், ‘எச்1 என்1’ பரவல் இல்லை; மக்கள் பீதியடைய வேண்டாம். சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்கனவே பள்ளி வளாகத்தை பார்வையிட்டுள்ளனர். அறிகுறி உள்ள மாணவர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்.

பள்ளி நுழைவாயிலுக்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்படாத உணவு விற்பனையாளர்கள், இறைச்சி கடைகள், சுற்றியுள்ள பகுதிகளில் குப்பையை கொட்டி, சுகாதாரமற்ற சூழலை உருவாக்குவதாக பலரும் குற்றம் சாட்டி உள்ளனர். பள்ளி வளாகத்தை சுற்றி சுகாதாரத்தை மேம்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us