தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/6 பசுக்கள் மர்மச்சாவு மேலாளர் கைது

6 பசுக்கள் மர்மச்சாவு மேலாளர் கைது

6 பசுக்கள் மர்மச்சாவு மேலாளர் கைது


UPDATED : அக் 24, 2026 05:17 PM

ADDED : அக் 24, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 05:17 PM ADDED : அக் 24, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முசாபர்நகர்: ஆறு பசு மாடுகள் இறந்து கிடந்த காப்பகத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், ராம்ராஜ் அருகே, சுஹாபூர் கிராமத்தில், ‘பண்டி சஜ்ஜுமால்’ என்ற பசு காப்பகம் இயங்கி வருகிறது. இதன் மேலாளராக ராகுல் யாதவ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

கடந்த, 19ம் தேதி காப்பகத்தில் இருந்த ஆறு பசு மாடுகள் உயிரிழந்தன. இதையடுத்து, சரியாக பராமரிக்காததால் பசு மாடுகள் இறந்து விட்டதாக குற்றம்சாட்டி, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால், போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த ராம்ராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிஷிகா சிங், வழக்குப் பதிவு செய்து ராகுல் யாதவை கைது செய்தார். பசுக்களின் உடல்களை கால்நடை டாக்டர்கள் உடற்கூறு ஆய்வு செய்தனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன், குற்றப்பத்திரிகை தயாரிக்கப்படும் என போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us