தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ரூ. 62 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் பிடிபட்டனர்

ரூ. 62 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் பிடிபட்டனர்

ரூ. 62 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் பிடிபட்டனர்


UPDATED : அக் 24, 2026 05:17 PM

ADDED : அக் 24, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 05:17 PM ADDED : அக் 24, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஜவுளிக்கடை மற்றும் மருத்துவ உபகரண நிறுவனங்களில், 62 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

டில்லி, சராய் காலே கானை சேர்ந்தவர், முஷீர் கான். மொத்த ஜவுளிக்கடை ஊழியராக பணியாற்றியவர். மவுஜ்பூரை சேர்ந்தவர் ஷாரூக் என்ற முஹமது இஷாக். இருவரும் சேர்ந்து, ஓக்லாவில் உள்ள ஒரு மொத்த ஜவுளி வியாபாரியிடம், 45 லட்சம் ரூபாய்க்கு ஆடைகளை கடனுக்கு வாங்கினர். ஆனால், அவர்கள் அனுப்பிய காசோலைகள், வங்கிக்கணக்கில் பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டன.

இதுகுறித்து, ஜவுளி வியாபாரி கொடுத்த புகார்படி, ஓக்லா தொழிற்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, முஷீர் கான் மற்றும் முஹமது இஷாக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அதேபோல, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த அஸ்லாம்,28 என்பவர், டில்லி, ஓக்லா தொழிற்பேட்டையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், 17.68 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தார். நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு, பணம் அனுப்பி விட்டதாக மொபைல் போனில் எடுத்த, ‘ஸ்கிரீன் ஷாட்’ அனுப்பினார். ஆனால், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை.

இதுகுறித்த புகாரின் படி வழக்குப் பதிவு செய்த போலீசார், அஸ்லாமை கைது செய்தனர். ஓக்லாவில் 17.68 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய மருத்துவ உபகரணங்களை, டில்லி, ரமேஷ்நகர்-, மானசரோவர் கார்டனில் உள்ள, ‘மெஸ்ஸர்ஸ் ஸ்வஸ்திக் சர்ஜிகல்ஸ்’ நிறுவனத்தில், 67 லட்சம் ரூபாய்க்கு விற்றதை ஒப்புக் கொண்டார். அந்தப் பொருட்களை ஒப்படைக்க ஸ்வஸ்திக் நிறுவனத்துக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

ஆல்வார் அரசு மருத்துவமனையில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றிய அஸ்லாம், கிரிக்கெட் பந்தயத்தில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்ததால் இதுபோன்ற மோசடிகளில் இறங்கியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் அஸ்லாம் மீது மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூவரிடமும் ஓக்லா தொழிற்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us