உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 24, 2026 02:46 PM
ADDED : அக் 24, 2026 02:44 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த, 66 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
டில்லி, விஜய் விஹாரில் சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை நடப்பதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
விஜய் விஹார் ராம்புரா பகுதியில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவில் இருந்த, 66 கிலோ பட்டாசுகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். அவற்றை ஆட்டோவில் எடுத்து சென்ற ராம்புராவை சேர்ந்த விஜேந்தர் குமார்,33, என்பவரை கைது செய்தனர். சில்லரை வியாபாரிகளிடம் பட்டாசுகளை விற்க எடுத்துச் சென்றதாக விஜேந்தர் ஒப்புக் கொண்டார். விசாரணை நடக்கிறது.
