ADDED : மே 18, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் தொழிற்பேட்டையில் துண்டு தயாரிக்கும் ஜவுளி ஆலையில், நேற்று மாலை மின்கசிவு காரண மாக தீ பற்றியது.
ஜவுளி ஆலை என்பதால், அதன் இரண்டு தளங்களிலும் துணி கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் தீ மளமளவென பரவியது.
உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஐந்து மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். ஜவுளி ஆலை அதிபரின் வீடும் இந்த ஆலையிலேயே அமைந்துள்ளது.
தீ விபத்தில் ஆலை அதிபர் உஸ்மான், அவரது ஒன்றரை வயது பேரன் உட்பட குடும்பத்தினர் மூவர் மற்றும் பணியாளர்கள் நால்வர் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்தனர்.